யாழ்ப்பாணத்தில் மோதலில் ஈடுபட்ட மூவர் கைது!

யாழ்.திருநெல்வேலியில் குழு மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களை யாழ்ப்பாண பொலிசார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி சிவன் அம்மன் ஆலய சூழலில் நேற்றைய தினம்(புதன்கிழமை) இரவு மது போதையில் இரு இளைஞர்கள் குழு, இரும்பு கம்பிகள் தடிகளுடன் மோதலுக்கு தயாராக நிற்பதாக யாழ்ப்பாண பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு யாழ்ப்பாண பொலிசார் விரைந்த போது, போலீசாரை கண்டதும் இளைஞர்கள் குழு அவ்விடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர்.
தப்பியோடியவர்களில் மூவரை பொலிசார் மடக்கி பிடித்துள்ளனர். அதேவேளை தப்பியோடிய இளைஞர்களின் மூன்று மோட்டார் சைக்கிள்களையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
இதனை அடுத்து கைது செய்யப்பட்டவர்களையும் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிளையும் யாழ்ப்பாண பொலிசார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.