ம.தி.மு.க. தொண்டர் தீக்குளிப்பு: வைகோ பதற்றம்!

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக ம.தி.மு.க. தொண்டர் தீக்குளித்துள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் இன்று (சனிக்கிழமை) ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இடம்பெற்று வரும் நடைபயணத்தின் போது இந்த முயற்சியில் ரவி என்னும் இளைஞர் ஈடுபட்டுள்ளார்.
இன்று நண்பகல் நடைபயண பொதுக்கூட்டம் ஒன்றில் பொதுச் செயலாளர் வைகோ உரையாற்றிக் கொண்டிருக்கையில், “நியூட்ரினோ திட்டத்தை கைவிடுக’ எனக் கூச்சல் எழுப்பியவாறு சிவகாசியை சேர்ந்த ரவி என்னும் இளைஞர் தீக்குளித்துள்ளார்.
இதை மேடையில் இருந்து அவதானித்த வைகோ உடனடியாக இறங்கி வந்து தீயை அணைக்கு முயற்சிக்கு கைகொடுத்ததோடு ரவியை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதை தொடர்ந்து மேடைக்கு சென்று பேசிய வைகோ, தொண்டர்கள் தீக்குளிப்பது தவறு. அறவளியில் இடம்பெறும் போராட்டம் இது. குறித்த இளைஞன் புன்னகையோடு இங்கு வந்தார், அதற்கிடையில் இப்படியொரு முடிவை மேற்கொண்டுள்ளமை மனவருத்தமளிக்கிறது” எனக் கண்ணீர் விட்டார் அழுதார் வைகோ.
மேலும் கட்சி நிர்வாகிகள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்த வைகோ, ரவியை அப்பல்லோ வைத்தியசாலையில் சேர்த்து தீவிர சிகிச்சை வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.