யாங்கோனில் இரண்டாவது நாளாக போராட்டம் : இணையச் சேவையை முடக்கம்
In ஆசியா February 7, 2021 7:00 am GMT 0 Comments 1307 by : Jeyachandran Vithushan

மியான்மரின் முக்கிய நகரமான யாங்கோனில் இரண்டாவது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடி, ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், ஜனநாயகம் கிடைக்கும் வரை தங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் யாங்கோன் பல்கலைக்கழகத்திற்கு அருகே உள்ள வீதிகளில் பொலிஸார் மற்றும் கலகத்தை கட்டுபடுத்தும் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு இராணுவம் தடை விதித்த சில மணி நேரத்தில் இணையச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கவும், ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.