யார் இந்த கோட்டாபய ராஜபக்ஷ?
November 19, 2019 8:47 am GMT

ராஜபக்ஷவின் சகோதரர் என்பதை தவிர தனக்கு அரசியல் அனுபவம் இல்லை என கடந்த 2017 ஆம் ஆண்டு கொழும்பை தளமாகக் கொண்டு இயங்கும் வெளிநாட்டு ஊடக சந்திப்பில் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
ஆனால் டொனால்ட் ட்ரம்ப் ஒரு வர்த்தகர் என்பதை அன்றைய தினம் சுட்டிக்காட்டிய கோட்டாபய ராஜபக்ஷ, அரசியலின் ஆழம் பார்க்க வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்திருந்தார்.
இதனை தொடர்ந்து கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து வீழ்த்தப்பட்ட தேசிய பாதுகாப்பை மீண்டும் பலப்படுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில் இன்று முன்னாள் பாதுகாப்பு செலயலாளரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.
ஒரு தசாப்தத்திற்கு முன்னர் விடுதலை புலிகளுக்கு எதிரான வெற்றியை அடுத்து பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் கோட்டாபய ராஜபக்ஷ ஒரு தலைவராக பார்க்கப்பட்டார். அதுமட்டுமன்றி கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்தும் அவரை பொரும்பான்மையான சிங்கள மக்கள் நாட்டின் தலைவராக வரவேண்டும் என எதிர்பார்த்தனர்.
கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் மஹிந்த ராஜபக்ஷவின் 10 ஆண்டுகால ஆட்சியின்போது பல குற்றச்சாட்டுக்கள் குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டுக்கள், போர் குற்றச்சாட்டுக்கள், தமிழர்களை சித்திரவதை செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை கோட்டாபய எதிர்கொண்டார்.
இதேவேளை 2009 ஆம் ஆண்டு பிரபல ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டமை தொடர்பாகவும் அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக அஹிம்சா விக்ரமதுங்கவினால் அமெரிக்க நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இருப்பினும் வௌிநாட்டு விடுப்புரிமை சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை நடத்த முடியாது என கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்தும் அவர் ஜனாதிபதியாக போட்டியிட அவரது இரட்டை குடியுரிமை பெரும் தடையாக இருந்தது.
குறிப்பாக அமெரிக்க பெடரல் பதிவேடுகளை மேற்கோள் காட்டி, அதை கைவிடுவதற்கான அவரது கூற்றை விமர்சகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியிருந்ததுடன், இரண்டு சமூக ஆர்வலர்கள் அவரது இலங்கை குடியுரிமையின் செல்லுபடியை கேள்விக்கு உட்படுத்தி வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
அதனையும் கடந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை சோஷலிச குடியரசின் 8 ஆவது தேர்தலில் வெற்றிபெற்று 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் இவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர், பௌத்த மத தலைவர் ஒருவர் கோட்டா ஆட்சிக்கு வந்தால் ஒரு “ஹிட்லராக” இருப்பார் என விமர்சித்திருந்தார். இதேவேளை அவரது சகோதரர் பசில் ராஜபக்ஷவும் அவர் ஒரு “டெர்மினேட்டராக” இருப்பார் என்றும் ஊழலை முடிவுக்குக் கொண்டுவருவார் என்றும் கூறியிருந்தார்.
ஆனால் ஜனாதிபதித்தேர்தலில் வெற்றிபெற்று ஆற்றிய முதல் உரையில் கோட்டாபய ராஜபக்ஷ “நான் அனைத்து இலங்கையர்களுக்கும் (வாக்களித்த, எதிராக வாக்களித்த) ஜனாதிபதியாக இருப்பேன்” என உறுதியளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் மக்களை தீர்வல்லாத ஒரு தீர்வுக்குள் பெட்டி கட்டும் ஒரு சூழ்ச்சியே 13 ஆவது திருத்தம்…
கோட்டாபய ராஜபக்ஷ பதின்மூன்றாவது திருத்தத்தை தாண்ட ...
-
ஜனாதிபதி கோட்டாவின் வெளியுறவுக் கொள்கை எவ்வாறு அமையப்போகின்றது??
கோட்டாபய ராஜபக்ஷ புதிய அரசுத் தலைவராகத் தெரிவு செய...