யாழில் இருந்து மட்டக்களப்பிற்கு கேரளா கஞ்சா கடத்திய இருவர் கைது
In இலங்கை December 3, 2020 5:59 am GMT 0 Comments 1514 by : Yuganthini
யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பிற்கு காரின் ஊடாக கேரள கஞ்சா கடத்திய இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் இன்று (வியாழைக்கிழமை) அதிகாலை, குறித்த சந்தேகபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 2 கிலோ 200 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி ஜே.எஸ்.ஏ.ஜெயசிங்க தெரிவித்தார்.
பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில், மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி ஜே.எஸ்.ஏ.ஜெயசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர், சம்பவதினமான இன்று அதிகாலை, மட்டக்களப்பு, திருகோணமலை வீதி வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தப்போது, மறைத்து வைக்கப்பட்ட நிலையில், 2 கிலோ 200 கிராம் கொண்ட கேரளா கஞ்சாவை அதிலிருந்து மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள், பளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் கஞ்சா வியாபாரத்தில் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.