யாழில் உணவகத்தில் உயிரிழந்தவரின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை வெளியானது

யாழ்ப்பாணம், கே.கே.எஸ். வீதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பணியாளர் மாரடைப்பு நோயால் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னரான சட்ட மருத்துவ அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருமுருகண்டியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய தர்மலிங்கம் தயாகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் இறப்புக்கான காரணம் மாரடைப்பு எனத் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.