யாழில் சுதந்திரக் கட்சியின் பேரணியில் கலந்துகொண்ட வாள் வெட்டுக் குழு சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் பேரணியில் கலந்துகொண்ட வாள் வெட்டுக்குழுவைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுதந்திர தினத்தினை முன்னிட்டு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஏற்பாட்டில் யாழில் நேற்று (வியாழக்கிழமை) பேரணி ஒன்று நடைபெற்றது.
குறித்த பேரணியில், வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்த இருவர் கலந்து கொண்டுள்ளார்கள் என யாழ்ப்பாண குற்றத்தடுப்புப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, பேரணியில் கலந்துகொண்ட இருவரையும் கைது செய்வதற்குப் பொலிஸார் முயற்சித்த வேளை ஒருவர் தப்பி சென்றுள்ளார். மற்றையவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.