யாழில் சூட்சுமமான முறையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை- ஐவர் கைது!

யாழில் மிகவும் சூட்சுமமான முறையில் நடத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டதுடன், இரு பெண்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொற்பதி வீதியிலேயே விபச்சார விடுதி இன்று (வியாழக்கிழமை) முற்றுகையிடப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் அவரது குழுவினர் தலைமையில் இந்த முற்றுகை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மிகவும் சூட்சுமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட இந்த விபச்சார விடுதியில் இரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் பயன்படுத்தும் வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கைதானவர்கள் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை யாழ். நீதவான் நீதிமன்றில் நாளை மறுதினம் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.