யாழில் தனியார் வைத்தியசாலை சேவைகள் இடைநிறுத்தம்- 3 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன
In இலங்கை November 28, 2020 5:25 am GMT 0 Comments 2429 by : Yuganthini
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் அமைந்துள்ள திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், யாழ்.நகரின் மத்தியில் அமைந்துள்ள 3 வர்த்தக நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பாலமுரளி அறிவுறுத்தியுள்ளார்.
காரைநகரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் சென்று வந்த இடங்கள் சுகாதாரத் துறையினரால் இனங்காணப்பட்டு தொடர்புடையவர்கள் சுயதனிமைப்படுத்தப்படுகின்றனர்.
இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியே யாழ்ப்பாணம் மாநகர சபை பிரிவில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம்- கொழும்பு பயணிகள் மற்றும் பொருட்கள் சேவையில் ஈடுபடும் அதிசொகுசு பேருந்து மற்றும் பாரவூர்தி வாடிக்கையாளர் நிலையமும் புடவையகம் ஒன்றும் நாவாந்துறையில் ஒரு வியாபார நிலையமும் இவ்வாறு உடனடியாக மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனியார் வைத்தியசாலையின் பணியாளர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் ஊழியர்கள் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.