யாழில் தாக்குதலை மேற்கொண்ட நபர் கைது
In இலங்கை May 3, 2019 5:55 am GMT 0 Comments 2237 by : Dhackshala

யாழ்.நகர் பகுதி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் வாள்களுடன் சென்று வர்த்தக நிலையங்களில் கொள்ளையில் ஈடுபட்டதுடன் வீதியில் நடமாடிய சிலரை வாளால் வெட்டிக்காயப்படுத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்தோடு கொள்ளைச் சம்பவங்களுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலும் இருவர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ். நகரில் மணத்தறை லேன், நாவலர் வீதி உட்பட பல இடங்களில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை இரவு வேளையில் மூவர் கொண்ட கும்பலொன்று வாள்களுடன் நடமாடியுள்ளது. வீதியில் சென்றவர்களை வாளால் மிரட்டியும் வெட்டியும் அடாவடியில் ஈடுபட்ட இந்த கும்பல், கடைகளுக்குச் சென்று வாளை காண்பித்து கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் குறித்து சி.சி.ரி.வி. கமராக்களின் பதிவுகளை வைத்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையிலேயே அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.