யாழில் இடம்பெற்ற தெய்வீக சுகானுபவம்!

இந்தியாவின் பிரபல பரதநாட்டியக் கலைஞர் கலைமாமணி, நிருத்திய சூடாமணி, நாட்டிய இளவரசி ஸ்ரீமதி ஊர்மிளா சத்தியநாராயணனும், அவரது குழுவினரும் இணைந்து யாழில். பரதநாட்டிய நடன அளிக்கையினை வழங்கினார்கள்.
யாழ்.நல்லூர் சங்கிலியன் தோப்பில் நேற்று(புதன்கிழமை) மாலை 6.30 மணியளவில் குறித்த நடன அளிக்கை நடைபெற்றது.
யாழ்.இந்திய துணைத்தூதரகம் , இந்திய கலாச்சார உறவுகளுக்கான பேராயம் , மற்றும் வடமாகாண கல்வி , பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன இணைந்து தெய்வீக சுகானுபவம் -7 எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இதேவளை, குறித்த குழுவினர் இன்று(வியாழக்கிழமை) வவுனியா நகரசபை மண்டபத்தில் பாரதநாட்டிய பயிற்சி பட்டறையை நடத்தவுள்ளதுடன், மாலை 4.30 மணிக்கு நகரசபை மண்டபத்தில் நடன அளிக்கையையும் வழங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.