யாழில் பட்டப்பகலில் வீடு உடைத்து திருட்டு!

யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையில் பட்டப்பகலில் வீடு உடைத்து தங்க நகையும் பணமும் திருடப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனைக்கோட்டை, கூழாவடிக்கு அண்மையாகவுள்ள ஒழுங்கையில் உள்ள வீடொன்றிலேயே இன்று (சனிக்கிழமை) பகல் இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளது.
வீட்டில் வசிப்பவர்கள் வெளியில் சென்றிருந்த வேளை வீட்டை உடைத்து உள்நுழைந்த திருடர்கள், அலுமாரியை சல்லடை போட்டுத் தேடி அதில் வைக்கப்பட்டிருந்த 5 பவுண் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிக் கொண்டு தப்பித்துள்ளனர்.
இறப்பு வீடு ஒன்றுக்குச் சென்று திரும்பிய குடும்பத்தலைவர் வீடு உடைக்கப்பட்டுள்ளமை குறித்து ஆராய்ந்த போதே திருட்டுச் சம்பவம் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.