யாழில் பள்ளிவாசல், வர்த்தக நிலையங்களில கடும் தேடுதல்!
யாழ்ப்பாணம் ஜூம்மா பள்ளிவாசல் மற்றும் அதை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தீவிர தேடுதல் நடவடிக்கை இன்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், இதன்போது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் காணப்படவில்லை எனவும் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களையடுத்து நாடளாவிய ரீதியில் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெறும் பாதுகப்புத் தரப்பினரின் இந்த சோதனை நடவடிக்கையின்போது, பல்வேறு ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதோடு, பலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.