யாழில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று!

மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் ஐவருக்கு வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) 126 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே ஐவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த மூவர் மற்றும் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்குமே தொற்று கண்டறிப்பட்டுள்ளது.
கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்ட இருவர் அரச நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள் என மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மருதனார்மடம் கொரோனா கொத்தணியால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 156ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.