யாழில் வாள் ஒன்றை குளத்துக்குள் வீச முற்பட்ட இளைஞன் கைது
In இலங்கை April 28, 2019 8:51 am GMT 0 Comments 2947 by : Dhackshala

யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் வாள் ஒன்றை குளத்துக்குள் வீச முற்பட்ட இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாவாந்துறையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை முதல் படையினர் மற்றும் பொலிஸாரின் சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் வாளை குளத்துக்குள் வீச முற்பட்டபோது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அதனைக் கண்டுள்ளார். இதனையடுத்து சந்தேகநபர் அதனை கீழே போட முற்றபட்டவேளையே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.