யாழில் வீடொன்றுக்குள் நிலக்கீழ் தளம் – பொலிஸார் விசாரணை
In இலங்கை April 28, 2019 7:37 am GMT 0 Comments 2701 by : Dhackshala
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி வீதியில் பச்சை மசூதிக்கு அண்மையில் உள்ள வர்த்தகரின் வீடொன்றுக்குள் நிலக்கீழ் தளமொன்று சிறப்பு அதிரடிப்படையினரால் கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பாரியளவிலான சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்திருந்தனர்.
இந்தத் தேடுதலின்போதே வீடொன்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த நிலக்கீழ் தளம் கண்டறியப்பட்டது.
பங்கர் வடிவிலான இந்த நிலக்கீழ் தளம் சீமெந்தால் கட்டப்பட்டுள்ளது. அதனைக் கண்டறியாதவாறும் சீமெந்திலான கொங்ரீட் போடப்பட்டுள்ளது. அதற்குள்ளிருந்து எவையும் மீட்கப்படவில்லை.
குறித்த வீட்டில் சுமார் 40 வருடங்களுக்கு முன்பே இந்த நிலக்கீழ் பாதை அமைக்கபட்டுள்ளதாகவும் வீட்டின் உரிமையாளர் தற்போது உயிருடன் இல்லையென்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.