யாழில் 296 கிலோ கேரளா கஞ்சா அழிப்பு
யாழ்ப்பாணத்தில் மேல் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா இன்று (சனிக்கிழமை) எரித்து அழிக்கப்பட்டது.
அவ்வகையில், சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான 296 கிலோ கேரளா கஞ்சா போதைப் பொருள் யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்கு அருகிலுள்ள வெற்றுக் காணியில் எரியூட்டப்பட்டது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியில் 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் கைப்பற்றப்பட்ட இந்த கஞ்சா போதைப்பொருள்கள் குறித்த வழக்குகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில் சான்றுப் பொருள்களான கஞ்சா போதைப் பொருளை எரியூட்டி அழிக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் உத்தரவிட்டிருந்தார்.
அதற்கமைய நீதிமன்றப் பதிவாளரின் ஏற்பாட்டில் மேல் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் குறித்த கஞ்சா போதைப் பொருள் எரித்து அழிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.