யாழில் 653 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை- வடக்கில் இன்று தொற்றாளர்கள் இல்லை!

யாழ்ப்பாணத்தில் இன்று 653 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதன்படி, யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 413 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதில் வட பகுதியைச் சேர்ந்த எவருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 240 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லையென வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.