யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்திற்குப் பாதயாத்திரை!
In இலங்கை June 19, 2018 11:24 am GMT 0 Comments 1689 by : Ravivarman
யாழ்ப்பாணத்திலிருந்து 950 கிலோ மீற்றர் தூரத்தைக்கொண்ட ஹம்பாந்தோட்டை வரையான கதிர்காம பாதயாத்திரை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மட்டக்களப்பு ஆரையம்பதியை சென்றடைந்தது.
கடந்த மாதம் 10ம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமான பாதயாத்திரை எம்.வேல்வேத்தன் தலைமையில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைக் கடந்து மட்டக்களப்பை சென்றடைந்துள்ளது.
அங்கிருந்து அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களூடாக அடுத்த மாதம் 27ம் திகதி கதிர்காமம் முருகன் ஆலையத்தை அடையவுள்ளனர்.
இருமாதங்கள் தொடர்ச்சியாக நடக்கும் இந்த பக்தர்கள் இடைநடுவில் இந்து ஆலயங்களில் இரவுப்பொழுதைக் கழிப்பதுடன், சுமார் 100 ஆண் பெண் இந்துப் பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தமது பாதயாத்திரையைத் தொடர்கின்றனர்.
குறித்த பாதயாத்திரைக்காக கடும் ஆபத்தான உகந்தை காட்டுப்பகுதியூடாகவும் இவர்கள் பயணம் செய்யவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.