யாழ்ப்பாணத்துக்கு செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது- சூரியராஜா
In இலங்கை December 5, 2020 7:51 am GMT 0 Comments 1869 by : Yuganthini

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், மணித்தியாலத்திற்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் அபாயம் இருப்பதாகவும், மக்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் தற்போதுவரை 17 ஆயிரத்து 243 குடும்பங்களை சேர்ந்த 57ஆயிரத்து 513 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ரீ.என்.சூரியராஜா கூறியுள்ளார்.
அத்துடன் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ள அதேவேளை 6பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
யாழ்.மாவட்டத்தில் தற்போது 38 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 959 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 393பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 62 வீடுகள் முழுமையாகவும், 2 ஆயிரத்து 535 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.