யாழ் கல்லுண்டாயில் சுழல்காற்று. 9 வீடுகள் பகுதியளவில் சேதம்
In இலங்கை January 6, 2021 12:33 pm GMT 0 Comments 1579 by : Jeyachandran Vithushan

யாழில் இன்று (புதன்கிழமை) வீசிய சுழல் காற்றினால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார்
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் ஜே 136 நவாலி தெற்கு கிராம சேவகர் பிரிவில் இன்று மாலை சுழல் காற்று வீசியது.
இந்த தாக்கத்தின் காரணமாக 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்டஅனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீடுகள் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் தற்காலிகமாக தறப்பாள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.