யாழ். கிறிஸ்தவ மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாதிகள் எச்சரிக்கை கடிதம்!
In ஆசிரியர் தெரிவு May 5, 2019 2:51 am GMT 0 Comments 14434 by : Dhackshala
யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல கிறிஸ்தவ மகளிர் பாடசாலைக்கு பயங்கரவாத அமைப்பொன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் ஆதவன் செய்தி பிரிவிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தேசிய தௌஹீத் ஜமாத் – யாழ். மாவட்டம் என்ற பெயரிடப்பட்ட இந்தக் கடிதம் தபால் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டதாக குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘இது முஸ்லிம் நாடு. கிருஸ்தவர்களுக்கு இங்கு இடமில்லை’ என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடிதம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பின்னர் யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.