யாழ்.கொக்குவில் இந்துவில் வாள் கண்டுபிடிப்பு – பொலிஸ்
In இலங்கை May 5, 2019 2:17 pm GMT 0 Comments 2773 by : Jeyachandran Vithushan

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் இன்று நடத்தப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் சோதனை நடவடிக்கையின் போது வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், கொக்குவில் வராகி அம்மன் ஆலயப் பகுதியிலும் வாள் ஒன்று வீசப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
பாடசாலைகளின 6-13 வரையான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று பொலிஸாரால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் ஓர் அங்கமாக கொக்குவில் இந்துக் கல்லூரியில் இன்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் கல்லூரியின் மண்டபம் ஒன்றில் மேல் மாடியில் இருந்து வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கொக்குவில் வராகி அம்மன் கோவிலடியில் வாள் ஒன்று வீசப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் அதனை மீட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.