யாழ். தீவக பகுதிகளில் ஐந்து முஸ்லிம்கள் கைது!
In இலங்கை April 30, 2019 1:08 pm GMT 0 Comments 2275 by : Jeyachandran Vithushan

யாழ்ப்பாணம் – தீவக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஐந்து முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நயினாதீவில் நேற்று (திங்கட்கிழமை) கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது, முஸ்லிம் மதத்துடன் தொடர்புடைய இறுவெட்டுகள் வைத்திருந்தமை, மதம் சார்ந்த புத்தகங்கள் மற்றும் அரபு மொழி புத்தகங்கள் என்பவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை வேலணை, மண்கும்பான் பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் விசாரணைக்காக பின்னர் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் ஊர்காவற்துறை பொலிஸார் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.