யாழ். நகரப்பகுதியில் இடி மின்னல் தாக்கம் – மரங்கள் தீப்பற்றி எரிந்தன
யாழ்ப்பாணம், வலிகாமத்தில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது.
இந்நிலையில், யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட மணற்தறை லேன், சிவன் அம்மன் கோவிலடியில் இடி வீழ்ந்ததில் இரண்டு தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்தன.
இது குறித்து யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்புப் படைக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வாகனம் தென்னை மரங்களில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
யாழ்ப்பாணம், வலிகாமம் மேற்கு உள்ளிட்ட இடங்களில் இன்று பிற்பகல் 3 மணி தொடக்கம் திடீர் காற்று வீசியதுடன், இடியுடன் கூடிய மழை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.