யாழ். பல்கலை கிளிநொச்சி வளாகத்தில் ஆராய்ச்சி பயிற்சி நிலையம் திறப்பு!
யாழ்ப்பாணம் பல்கலைகழக கிளிநொச்சி வளாக விவசாய பீடத்தில் அமைக்கப்பட்ட ஆராய்ச்சிப் பயிற்சி நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திறப்பு விழா, இன்று (வெள்ளிக்கிழமை) காலை பத்து மணிக்கு இடம்பெற்றதுடன் இதில், கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஜப்பானியத் தூதுவர் அகிர சுகியமா (Akira sugiyama) மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
அத்துடன், கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க, யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் ஆகியோரும் கலந்துகொண்டு பயிற்சி நிலையத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சிப் பயிற்சி நிலையம் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.