வடக்கில் உள்ள அரச, தனியார் காணிகள் விடுவிப்பு!
In இலங்கை January 17, 2019 10:15 am GMT 0 Comments 1375 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் உள்ள அரச மற்றும் தனியார் காணிகள் அடுத்த வாரம் விடுவிக்கப்படவுள்ளன.
குறித்த பகுதிகளில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டுவந்த 46.11 ஏக்கர் அரச காணிகளும், 63.77 ஏக்கர் தனியார் காணிகளும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை வடக்கில் விவசாய நடவடிக்கைகளுக்காக இராணுவம் பயன்படுத்திய 1099 ஏக்கர் காணிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி உரிய திணைக்களங்களுக்கு வழங்கப்படும் என்றும் இராணுவத்தால் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.