யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவு: எமது ஆதரவு சரியான நேரத்தில் அறிவிக்கப்படும்- டக்ளஸ்
In இலங்கை December 26, 2020 10:47 am GMT 0 Comments 1462 by : Yuganthini

அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்துகின்றோம். யாருக்கு ஆதரவு என இன்னும் தீர்மானிக்கவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள நல்லூர் பிரதேச சபை மற்றும் யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி யாருக்கு ஆதரவினை வழங்கவுள்ளது என, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் எழுத்து மூலமான எந்த கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை. எனினும் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் நாங்கள் அனைவருடனும் பேசிக் கொண்டிருக்கின்றோம்.
நல்லூர் பிரதேச சபையில் ரேலோவிற்கு ஆதரவு வழங்கப் போகின்றோம் என்ற விடயத்திலும் எந்த உண்மையுமில்லை. எனினும் நாம் அனைவருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றோம். தகுந்த நேரத்தில் முடிவு அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.