யாழ். மாவட்டத்தில் கடும் மழை மற்றும் காற்றினால் ஐயாயிரம் பேர் பாதிப்பு!

கடந்த 24 மணிநேரத்தில் கடும் மழை மற்றும் காற்றின் தாக்கத்தினால் யாழ். மாவட்டத்திற்கு உட்பட்ட 15 பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிமகிள் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஷ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஆயிரத்து 424 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரத்து 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது நிலைகொண்டுள்ள தாழமுக்கத்தில் கடலானது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் கணிசமான மழைவீழ்ச்சி கிடைத்துள்ளதாகவும் எனினும், இதுவரையில் சூறாவளி அபாயம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த 24 மணிநேரத்தில் கடும் மழை மற்றும் காற்றின் காரணமாக 444 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ள என்றும் சிறு நடுத்தரத் தொழில் முயற்சியாளர்கள் 68 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.