யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
In இலங்கை February 2, 2021 5:45 am GMT 0 Comments 1239 by : Dhackshala

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவர்களான நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்று வருகின்றது.
இக்கூட்டத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செல்வராசா கஜேந்திரன், சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், திணைக்களத் தலைவர்கள், உள்ளூராட்சி மண்றங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களம் சார் பிரதிநிதிகள், காவல்துறையினர், அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.