யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு சிரிய அமைச்சர் அழைப்பு!
சிரியாவில் நிலவிய உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழும் மக்களை மீண்டும் நாட்டிற்கு வரவேற்பதாக சிரிய வெளிவிவகார அமைச்சர் வாலித் அல் மௌலெம் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. பொதுச்சபை அமர்வில் நேற்று (சனிக்கிழமை) உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ”பயங்கரவாத தாக்குதல் காரணமாக அழிவை சந்தித்த நாட்டை மீளக் கட்டியெழுப்புவது அவசியமானது. பயங்கரவாத்திற்கு பயந்து, பொருளாதார சரிவிற்கு ஈடுகொடுக்க முடியாமல் மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.
பயங்கரவாத்திற்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் நாம் உள்ளோம். ஆகவே, எமது நாட்டு மக்களை மீள அழைக்கின்றோம். இழந்தவற்றை உங்கள் கரங்களாலேயே மீளக்கட்டியெழுப்புங்கள்.
எமது நாட்டை மீளக் கட்டியெழுப்ப நேச நாடுகளுக்கு அழைப்பு விடுக்கின்றோம். யுத்தத்தின்போது எமக்கு தோள்கொடுத்த நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றோம். எனினும், பயங்கரவாத்திற்கு துணைபோன நாடுகளை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவோ அழைப்புவிடுக்கவோ மாட்டோம்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.