யெலோ வெஸ்ட் போராட்டங்களை அடக்க நடவடிக்கை!- ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு

ஐந்து மாதங்களாக நீடிக்கும் யெலோ வெஸ்ட் போராட்டங்களை அடக்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் அறிவிக்கவுள்ளார்.
அதன்படி இது தொடர்பான அறிவிப்பை பிரான்ஸ் ஜனாதிபதி இன்று (வியாழக்கிழமை) அறிவிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அறிவிப்பு கடந்த 15ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பரிசிலுள்ள பாரம்பரிய பேராலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து ஜனாதிபதியின் அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது.
எரிபொருள் விலையேற்றம் குறித்த அரசாங்கத்தின் திட்டத்தை கண்டித்து கடந்த நவம்பர் மாத நடுப்பகுதியில் இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இப்போராட்டங்களின் எதிரொலியாக எரிபொருள் விலை சீர்த்திருத்த திட்டத்தை அரசாங்கம் கைவிட்டது. எனினும், நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.