யோர்க் பிராந்திய பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்!
In கனடா October 19, 2018 4:20 pm GMT 0 Comments 1222 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

வட யோர்க் பிராந்திய பகுதியில் நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாங்க் ஸ்ட்ரீட் மற்றும் பிஞ்ச் அவென்யூ பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் இந்தச சம்பவம் இடம்பெற்று்ளளது.
இதன்போது 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ஆபத்தான கத்திக் குத்துக் காயங்களுக்கு உள்ளானதாகவும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் குறித்த தெளிவான விபரங்கள் வெளியிடப்படவில்லை என்ற போதிலும், மஞ்சள் நிற குளிர் அங்கி அணிந்த ஆண் ஒருவரை தேடி வருவதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.