ரகசியத்தகவல்களை வெளியிட்டமை தொடர்பில் நாடுகடத்தப்படும் பெண்
In கனடா March 19, 2018 12:26 pm GMT 0 Comments 1318 by : Velauthapillai Kapilan

கனடா வங்கியொன்றின் தகவல்களை தனது நண்பருக்கு ரகசியமாக தெரிவித்த பெண் ஒருவர் நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
கனடாவின் கல்கரி (Calgary) நகரில் வங்கி ஒன்றில் பணிபுரியும் குறித்த பெண் அவரது ஆண் நண்பரான நசெரி (Nasery) என்பவருக்கு வங்கியை கொள்ளையடிப்பதற்கு வசதியாக வங்கியின் வரைபடம், அலாரத்தை அமைதியாக்குதல் மற்றும் பணம் எங்கே வைக்கப்படும் என்பது போன்ற தகவல்களை வழகியிருந்தார்.
அதன்பின்னர் நசெரியும் அவரது இரண்டு நண்பர்களும் வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி வங்கியைக் கொள்ளையடிக்க முயற்சித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட பொலிஸார் வங்கியை சுற்றி வளைத்தனர்.
இந்நிலையில் அவர்கள் சில நிமிடங்களுக்குள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதன்பின்னர் இடம்பெற்ற விசாரைவில் குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்தனர், அவரும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர்கள் அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்த நிலையில் ஆறு மாதங்களுக்குமேல் ஒருவர் சிறைத்தண்டனை அனுபவித்தால் அவர் குடியுரிமை பெற முடியாது.
அதனால் சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதனால் இதைப் புரிந்து கொண்ட நீதிபதி ”நீங்கள் கோரும் தண்டனை, குற்றவாளி புலம்பெயர்வதற்கு எந்தப் பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்கிற நோக்கத்திலேயே உள்ளதாக எனக்குத் தோன்றுகிறது.” என்று கூறினார்.
அதனால் குறித்த வழக்கு தொடர்பில் இப்பெண் நாடுகடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.