ரங்கன ஹேரத்திற்கு வாழ்த்து தெரிவித்த ICC
In கிாிக்கட் March 20, 2018 10:10 am GMT 0 Comments 1867 by : Velauthapillai Kapilan

இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்தின் 40 ஆவது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து சர்வதேச கிரிக்கட் சபை அவரின் சிறந்த பந்துவீச்சுக் காணொளி ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
பங்களாதேஷில் 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது நியூசிலாந்துக்கு எதிராக அவர் வீசிய சிறப்பான பந்துவீச்சு அனைவரையும் கவர்ந்திருந்தது. எனவே அவருக்கு வாழ்த்து தெரிவித்து குறித்த காணொளியை வெளியிட்டுள்ளது.
குறித்த போட்டியில் 3.3 ஓவர்களில் 5 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 5 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார். இதில் 2 ஓவர்களுக்கு எந்தவித ஓட்ட எண்ணிக்கையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
3.3 overs.
2 maidens.
3 runs.
FIVE wickets! ?Happy Birthday to @HerathRSL, who bowled one of the greatest T20I spells ever against New Zealand at #WT20 in 2014! pic.twitter.com/4IGLuCb6Qs
— ICC (@ICC) March 19, 2018
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.