ரஞ்சன் கொகோய் வழக்கு விசாரணை – பாப்டே குழுவுக்கு கடிதம்!
In இந்தியா May 8, 2019 4:27 am GMT 0 Comments 1866 by : Krushnamoorthy Dushanthini

தலைமை நீதிபதி ரஞ்சன் கொகோய் குறித்து இடம்பெற்ற வழக்கு விசாரணை பற்றிய அறிக்கை தனக்கு வழங்கப்பட வேண்டும் என பாலியல் முறைப்பாட்டினை எழுப்பிய பெண், பாப்டே குழுவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கொகோய் குறித்த வழக்கு விசாரணைகளில் உரிய ஆதரம் இல்லை என கூறிய பாப்டே நீதிபதிகள் விசாரணையை தள்ளுபடி செய்தனர்.
இந்நிலையில் மூடிய அறையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை பற்றிய அறிக்கையை பெறுவதற்கு தனக்கு உரிமை இருக்கிறது எனவும் சாட்சிகள் அளித்த சாட்சியங்கள் மற்றும் விசாரணைக்குழுவால் பரிசீலிக்கப்பட்ட பிறரின் சாட்சியங்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் இருப்பின் அவற்றை பெறுவதற்கு தனக்கு முழு உரிமை உள்ளது எனவும் முறைப்பாடு எழுப்பிய பெண் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தலைமை நீதிபதிக்கு விசாரணை அறிக்கையின் நகல் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே வழங்கப்பட்டிருந்தால் அந்த நகலை பெறுவதற்கு தனக்கும் உரிமையுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கொகோய் மீது அவரிடம் உதவியாளராக பணியாற்றிய பெண் பாலியல் குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.