ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் போலியானது: முகுந்த் ரோஹத்கி
In இந்தியா May 4, 2019 5:13 am GMT 0 Comments 2086 by : Yuganthini

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் முறைப்பாடு தெரிவித்த பெண் திடீரென விசாரணையிலிருந்து விலகியுள்ளமையானது அவர், போலியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்பதை உணர்த்துவதாக முன்னாள் அரசத் தலைமை வழக்கறிஞர் முகுந்த் ரோஹத்கி குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண்ணொருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.
ஆனால் குறித்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த ரஞ்சன் கோகாய், அதற்கு கண்டனத்தை தெரிவித்ததோடு அப்பெண் மீது வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே இரண்டு பெண் நீதிபதிகள் கொண்ட மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரிக்க முன்வந்தது. மேலும் பாதிக்கப்பட்டதாக கூறும் அப்பெண் அச்சமின்றி நடந்ததை விபரித்திருக்கலாம் என்றும் விசாரணைக் குழுவை குறைகூறுவது தவறான விடயமெனவும் முகுந்த் ரோஹத்கி குறிப்பிட்டார்.
இருப்பினும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் விசாரணையிலிருந்து அப்பெண் ஒதுங்கிவிட்டதால் இந்த குற்றச்சாட்டுகள் போலியானவை என்றே தோன்றுகிறது எனவும் தலைமை நீதிபதி மிகவும் கண்ணியமானவர் எனவும் முகுந்த் ரோஹத்கி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.