News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • சுதந்திர தனி நாடு கோரி மீண்டும் ஆர்ப்பாட்டம்!
  • கூட்டமைப்பு முன்மொழியும் நல்லிணக்கத்தை ஏற்க மாட்டோம் – ஜீ.எல்.பீரிஸ்
  • வரவு – செலவு திட்டம் வறுமையை அடிப்படையாக கொண்டது – நிதி அமைச்சர்!
  • பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்
  • பாகிஸ்தான் இராணுவ தொடரணி மீது தாக்குதல் – 9 பேர் உயிரிழப்பு 11 பேர் காயம்!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. ரணிலை பழிவாங்கவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது: அஜித் பி பெரேரா

ரணிலை பழிவாங்கவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது: அஜித் பி பெரேரா

In இலங்கை     November 10, 2018 11:38 am GMT     0 Comments     1473     by : Varshini

பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போன நிலையில், ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பழிவாங்கவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதென ஐ.தே.க.வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

அலரி மாளிகையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நாட்டில் கடந்த மாதம் 26ஆம் திகதி அரசியலமைப்புக்கு முரணான ஒரு பாரதூரமான செயற்பாடொன்று மேற்கொள்ளப்பட்டதென குறிப்பிட்ட அவர், ஜனாதிபதியால் பெரும்பான்மையான ஆதரவினைப் பெற்றுக்கொள்ள முடியாது போன காரணத்தினாலேயே நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்துள்ளாரென குற்றஞ்சாட்டியுள்ளார்.

14ஆம் திகதி நாடாளுமன்றில் தனக்கு ஏற்படவிருந்த அவமானத்தை மறைத்துக்கொள்ளவே ஜனாதிபதி இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளாரென அவர் மேலும் கூறியுள்ளார்.

அரசமைப்புக்கு முரணாக இரண்டாவது தடவையாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தச் செயற்பாட்டுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமன்றி, மஹிந்த ராஜபக்ஷவும் பொறுப்புக்கூற வேண்டுமென அஜித் பி பெரேரா சுட்டிக்காட்டினார்.

மேலும், வரவு- செலவு திட்டம் கொண்டுவரப்படாமல், தேர்தலுக்கு நிதியொதுக்கீடு செய்யப்படாமல், தேர்தல் ஆணைக்குழுவும் தேர்தல் செயற்பாடுகளுக்கு தயாராக இல்லாத நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமையானது நாட்டில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டார்.

அந்தவகையில் இது முற்றிலும் ரணில் விக்ரமசிங்கவை பழிவாங்க மேற்கொள்ளப்பட்ட செயற்பாமென குறிப்பிட்ட அஜித் பி பெரேரா, தேர்தலுக்கு முகங்கொடுக்க தயாராகவே உள்ளோம் என தெரிவித்தார். ஆனால், எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்துவது என்பது ஜனநாயகம் அல்லவென்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, 19ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக தனக்கு அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளமையை அறியாது ஜனாதிபதி செயற்படுவதன் விளைவாகவே இந்த சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரதமரின் உரை – தமிழ் தலைமைகள் சாடல்  

    உரிய தீர்வுகளை வழங்காமல் யுத்த குற்றங்களை மறந்து செயற்படுமாறு பிரதமர் கோருவது, தமிழர்களுக்கான நீதியை

  • இராணுவம் போர்க்குற்றத்தை இழைக்கவில்லை – அரசாங்கம்!  

    மனித உரிமை அணைக்குழுவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமுமே இராணுவம் மீது குற்றச்சாட்டை முன்வைக்கின்றதென இ

  • பிரதமரின் உரை உணர்த்தும் செய்தி என்ன? – சிறிதரன் சந்தேகம்  

    போர்க்குற்ற விசாரணைகள் வேண்டாமென கூறிய பிரதமரின் கருத்து, தமிழர்கள் தொடர்ந்தும் அழிக்கப்படுவர் எனும்

  • பிளவுபடாத நாட்டுக்குள்ளேயே அதிகார பகிர்வு வழங்கப்படும் – மரிக்கார்  

    பிளவுபடாத நாட்டுக்குள்ளேயே அதிகார பகிர்வு வழங்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கொழு

  • ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த  

    போர்க்குற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்ததன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டைக் காட்டிக் கொடு


#Tags

  • Ajith P perera
  • Ranil wickramasinghe
  • UNP
  • அஜித் பி. பெரேரா
  • ஐ.தே.க
  • ரணில் விக்ரமசிங்க
    பிந்திய செய்திகள்
  • சுதந்திர தனி நாடு கோரி மீண்டும் ஆர்ப்பாட்டம்!
    சுதந்திர தனி நாடு கோரி மீண்டும் ஆர்ப்பாட்டம்!
  • வரவு – செலவு திட்டம் வறுமையை அடிப்படையாக கொண்டது – நிதி அமைச்சர்!
    வரவு – செலவு திட்டம் வறுமையை அடிப்படையாக கொண்டது – நிதி அமைச்சர்!
  • பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்
    பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்
  • பாகிஸ்தான் இராணுவ தொடரணி மீது தாக்குதல் – 9 பேர் உயிரிழப்பு 11 பேர் காயம்!
    பாகிஸ்தான் இராணுவ தொடரணி மீது தாக்குதல் – 9 பேர் உயிரிழப்பு 11 பேர் காயம்!
  • ஜெரெமி கோர்பினுடன் கருத்து வேறுபாடு : கட்சி உறுப்பினர்கள் விலகல்!
    ஜெரெமி கோர்பினுடன் கருத்து வேறுபாடு : கட்சி உறுப்பினர்கள் விலகல்!
  • 7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த அதிசய சம்பவம்
    7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த அதிசய சம்பவம்
  • மனிதன் மனிதனாக இருப்பதற்குக் காரணம் திருமணம் – தம்பி ராமையா
    மனிதன் மனிதனாக இருப்பதற்குக் காரணம் திருமணம் – தம்பி ராமையா
  • மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியருக்கு விளக்கமறியல்
    மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியருக்கு விளக்கமறியல்
  • இராணுவம் போர்க்குற்றத்தை இழைக்கவில்லை – அரசாங்கம்!
    இராணுவம் போர்க்குற்றத்தை இழைக்கவில்லை – அரசாங்கம்!
  • வவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்
    வவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.