ரபேல் விவகாரம் – நிர்மலா சீதாராமனை கடுமையாக தாக்கிய ராகுல்
In இந்தியா January 6, 2019 1:15 pm GMT 0 Comments 1452 by : Dhackshala

ரபேல் விவகாரத்தில் பிரதமருக்கு ஆதரவாக ஒரு பொய்யை மறைக்க பல பொய்களை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி வருவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி சாடியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன், ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
இது குறித்து தனது டுவிட்டர் பதிவில் குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி,பொதுத்துறையை சேர்ந்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திற்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் வழங்கிய ஆவணங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள், அல்லது பதவி விலகுங்கள் என பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, ஹிந்துஸ்தான் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே அந்த நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் வாங்கியிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜ்வாலா கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.