ரயில் கடவை காப்பாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
In இலங்கை July 11, 2019 6:19 am GMT 0 Comments 1925 by : Dhackshala
வடக்கு கிழக்கைச் சேர்ந்த ரயில் கடவை காப்பாளர்கள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்த போராட்டம் இன்று (வியாழக்கிழமை) வவுனியா ரயில் நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும், பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்து தமது கடமைகள் ரயில் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்படவேண்டும் என தெரிவித்தே இந்த போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்திருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ரயில் கடவை காப்பாளர்கள், ‘250 ரூபாய் சம்பளத்தினை உயர்த்து’, ‘பொலிஸாரிடம் இருந்து எம்மை மீட்க வேண்டும்’, ‘எமது பிள்ளைகளின் எதிர்காலம் என்ன?’, ‘எம்மை நிரந்தர நியமனத்தில் உள்வாங்கு’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
சுமார் ஒரு மணி நேரமாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.