ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்
In இலங்கை January 9, 2021 8:30 am GMT 0 Comments 1293 by : Jeyachandran Vithushan

இந்தவார இறுதியில் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை 19 ஆக அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக பிரதான ரயில் பாதையில் 6 ரயில்களும், கரையோர ரயில் பாதையில் 7 ரயில்களும், புத்தளம் ரயில் பாதையில் 3 ரயில்களும் சேவையில் ஈடுபடவுள்ளன.
அத்தோடு களனிவெளி ரயில் பாதையில் 2 ரயில்களும், வடக்கு ரயில் பாதையில் 1 ரயிலும் இன்றும் நாளையும் சேவையில் ஈடுப்படும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இருப்பினும், தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் தெமட்டகொட ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்படமாட்டாது என்றும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.