ரயில் சேவைகளில் இடையூறு விளைவித்த எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன்: கோபத்தில் பயணிகள்
In இங்கிலாந்து October 17, 2019 9:43 am GMT 0 Comments 1429 by : shiyani

இன்று காலை லண்டன் நிலக்கீழ் ரயில்களின் மேலேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் உறுப்பினர்களுக்கும் பயணிகளுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்துக்கு எதிராக கடந்த 11 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக இன்று காலை ஸ்ரட்பேர்ட், கனிங்ரவுன் மற்றும் ஷட்வெல் ஆகிய இடங்களில் ரயில்களின் மேல் ஏறி சுற்றுசூழல் ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதால் சினமடைந்த பயணிகள் ரயில்களின் மேலேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை கீழே இழுத்து விழுத்திய காரணத்தால் அங்கு பதற்றம் நிலவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடையூறுகள் காரணமாக சில ரயில் சேவைகள் இன்று காலை இடைநிறுத்தப்பட்டிருந்ததாகவும் இப்போதும் ரயில் சேவைகளில் தாமதம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நான்கு சுற்றுசூழல் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ள நிலையில் காலநிலை மாற்றம் குறித்த அவசரநிலையை முன்னிலைப்படுத்த இடையூறுகள் அவசியமென எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.