ரஷ்யாவிடமிருந்து ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்கிறது இந்தியா
In இந்தியா May 3, 2019 9:31 am GMT 0 Comments 2594 by : Yuganthini

ரஷ்யாவிடமிருந்து காமோவ்- 31 ரக ஹெலிகொப்டர்களை இந்தியா கொள்வனவு செய்யவுள்ளது.
கடற்பரப்பிலுள்ள விமானம் தாங்கிக் கப்பல்கள் மற்றும் மிகப்பெரிய போர்க்கப்பல்கள் ஆகியவற்றை பாதுகாப்பதற்காக குறித்த ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதேவேளை இந்தியாவிடம் காமோவ்- 31 ரக ஹெலிகொப்டர்கள் 12 காணப்படுகின்றன. ஆனாலும் போர் கப்பல்களுக்கு தற்போது அச்சுறுத்தல் அதிகரித்துள்ளமையால் கூடுதலாக 10 ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் 10 காமோவ் 31 ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை பாதுகாப்பு அமைச்சகம் தற்பொது ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.