ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் – உயர் நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு!
In இந்தியா May 2, 2019 6:24 am GMT 0 Comments 2360 by : Krushnamoorthy Dushanthini

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரித்தானிய குடியுரிமையை கொண்டிருப்பதாகவும், அதன் காரணமாக அவர் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கவேண்டுமெனவும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த வழக்கு அடுத்தவாரம் கோடை விடுமுறைக்கு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை வைத்திருக்கிறார் என அமேதி சுயேட்சை வேட்பாளரான துருவ் லால் என்பவர் தேர்தல் ஆணையத்தில் முறைப்பாடொன்றை பதிவுசெய்திருந்தார். குறித்த முறைப்பாட்டை நிராகரித்த தேர்தல் ஆணையம் ராகுல் காந்தியின் வேட்பு மனுக்களை இரண்டு தொகுதிகளிலும் ஏற்றுக்கொண்டது.
குறித்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.