ராஜபக்ஷவின் வெற்றிக்காக நுகேகொடை போராட்டத்திற்கு தலைமை தாங்கியமை தவறு என்றால் மன்னிப்புக்கோர தயார் – விமல்
In இலங்கை February 9, 2021 7:58 am GMT 0 Comments 1486 by : Jeyachandran Vithushan

மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக நுகேகொடையில் இடம்பெற்ற பேரணிக்கு தலைமை தாங்கியவர்களில் ஒருவராக செயற்பட்டமை தவறு என்றால் மன்னிப்புக் கோர தயாராக இருப்பதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட வேண்டும் என விமல் வீரவன்ச தெரிவித்த கருத்து தொடர்பாக, மன்னிப்பு கோர வேண்டுமென அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நீர்கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 2015 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர், மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக நுகேகொடையில் பெப்ரவரி 18 ஆம் திகதி இடம்பெற்ற பேரணிக்கு தன தலைமை தங்கியதாக குறிப்பிட்டார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உயர் பதவியில் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே தான் இதனை கூயதாகவும் மாறாக மஹிந்த ராஜபக்ஷவை தலைமைத்துவத்திலிருந்து விலக்க வேண்டும் என்பதற்காக பேசவில்லை என்றும் விமல் வீரவன்ச கூறினார்.
மஹிந்த ராஜபக்ஷ தலைவராக செயற்படும் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் கட்சியில் உயர் பதவி ஒன்றை வழங்கினால் தற்போதைய அரசியல் பலம் மேலும் வலுவடையக்கூடும் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.