ராஜீவ் காந்திக்கு எதிரான சர்ச்சை பேச்சு – மோடிக்கு எதிராக மற்றுமோர் முறைப்பாடு!
In இந்தியா May 7, 2019 3:47 am GMT 0 Comments 2188 by : Krushnamoorthy Dushanthini

காங்கிரஸின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதமருமான மறைந்த ராஜீவ் காந்தி குறித்த சர்ச்சை கருத்துக்களை தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய குற்றச்சாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூடத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, ராஜீவ் காந்தி மிஸ்டர் கிளீன் என காங்கிரஸ் கட்சியினரால் போற்றப்பட்டதாகவும், ஆனால் கடைசி காலத்தில் அவருடைய வாழ்க்கை நம்பர் 1 ஊழல்வாதியாக முடிவடைந்தது எனவும் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் குறித்த சர்ச்சை கருத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களினால் தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் இந்திய கலாசாரத்துக்கு எதிராகவும், சட்டவிரோதமாகவும் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் பிரதமர் நரேந்தி மோடிக்கு எதிராக இதுவரை 8 குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.