ராட்சசன் திரைப்படத்தின் சைக்கோ வில்லன் யார் தெரியுமா?

ராம்குமார் இயக்கத்தில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘ராட்சசன்‘ திரைப்படத்தில் கிறிஸ்டோபர் என்கின்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ள வில்லனை படக்குழு நேற்று அறிமுகப்படுத்தியது.
முண்டாசுப்பட்டி திரைப்படத்திற்கு பிறகு ராம்குமார் மற்றும் விஷ்ணு விஷால் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் ராட்சசன்’ படத்திற்கு இரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சைக்கோ த்ரில்லர் கதையான இந்த திரைப்படம் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தில் வில்லனாக சைக்கோ கொலைகாரன் என்ற காதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சரவணன். இவரை படக்குழு நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.
சரவணன் என்பவர் தான் ராட்சசன் படத்தில் கிறிஸ்டோபர் என்ற மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்
சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்க போராடும் பொலிஸ் அதிகாரியாக விஷ்ணு விஷால் நடித்திருக்கின்றார். விஷ்ணுக்கு ஜோடியாக அமலாபால் முக்கிய கதாபாத்திரத்திலும் சூசேன் ஜார்ஜ் ,சஞ்சய் ,காளி வெங்கட்,மற்றும் ராம்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் ஆக்சஸ் பிலிம் ஃபாக்ட்ரி மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.