“ராட்சசன்” வில்லன் யார்? – விஷ்ணுவிடம் வினவிய சூப்பர் ஸ்டார்!
In சினிமா October 23, 2018 7:42 am GMT 0 Comments 1844 by : Varothayan

நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் ராம் குமாரின் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் “ராட்சசன்”.
தமிழில் நீண்ட நாட்களின் பின்னர் ஒரு நல்ல “த்ரில்லர்” படம் என்ற பாராட்டை பலரிடம் இருந்தும் பெற்று வருகின்றது. நடிகர் விஷ்ணுவின் திரையுலக பயணத்திலும் இது ஒரு மைல் கல்லாக பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தில் பலரும் வியந்த ஒரு விடயம் ஆங்கிலோ-இந்தியனாக நடித்த அந்த வில்லன் குறித்துத் தான். ஒப்பனை முகமூடிக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் அந்த நடிகன் யாரென்ற கேள்விக்கான பதிலை இன்னமும் படக்குழு அறிவிக்கவில்லை.
அண்மையில் படத்தின் வெற்றிச்சந்திப்பில் கலந்து கொண்ட இயக்குனர் ராம் குமார், வில்லனாக நடித்த நடிகரின் பெயர் சரவணன். அவரை இன்னும் சில தினங்களில் ஊடகங்கள் முன் அறிமுகப்படுத்துவதாக கூறியிருந்தார்.
இதேவேளை, ராட்சசன் குறித்து பாராட்டுவதற்கான விஷ்ணுவிற்கு அழைப்பெடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அந்த வில்லன் யார் எனவும் வினவியிருக்கின்றாராம். இதனை, விஷ்ணு தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டாரே அறிய ஆசைப்படும் அந்த நடிகன் யார் என்பதை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கின்றோம்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.