மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கானின் விளக்கமறியல் நீடிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போதே அவரை எதிர்வரும் 20ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மன்னார் – தலைமன்னார் பகுதியில் உள்ள 240 இலட்சம் பெறுமதியான நிலமொன்றிற்கு போலி உறுதிப்பத்திரம் தயாரித்து மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டு இவர் கடந்த 22ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.