ரிஷாட்டின் முன்னாள் கணக்காளர் அலகரட்னம் மனோரஞ்சன் பிணையில் விடுதலை
In இலங்கை January 6, 2021 8:23 am GMT 0 Comments 1378 by : Dhackshala

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் முன்னாள் கணக்காளர் அலகரட்னம் மனோரஞ்சன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணைகள் இரண்டின் அடிப்படையில் அவரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த பெர்ணான்டோ உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு, குறித்த வழக்கு மார்ச் மாதம் 27ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது புத்தளத்தில் இருந்து மன்னார் வரையில் இலங்கை பேருந்து சேவைக்கு சொந்தமான பேருந்துகளில் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு போக்குவரத்து சேவையை வழங்கியதன் மூலம், பொதுச் சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டத்தை மீறியமை முதலான குற்றச்சாட்டுக்கள் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், இடம்பெயர்ந்தோரை மீள குடியேற்றும் வேலைத்திட்டத்தின் முன்னாள் கணக்காளர் அழகரட்னம் மனோரஞ்சன் உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக சுமத்தப்பட்டன.
இதனையடுத்து, அழகரட்னம் மனோரஞ்சன் ஒக்டோபர் 14ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.